சினிமா

கொரோனா ஊரடங்கால் சிரமம்! 100 நடன கலைஞர்களுக்கு நடிகை கத்ரீனா கைப் செய்த பெரும் உதவி!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி கோரதாண்டவமாடி வருகிறது. மேலும் நாளுக்கு நாள் பாதிப்புகள் மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

மேலும் இத்தகைய ஊரடங்கால்  படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் திரைத்துறையை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் பலரும் வேலையில்லாமல் சாப்பாட்டிற்கு கூட வருமானமின்றி பெருமளவில் சிரமப்பட்டு வருகின்றனர்.இதனால் பெருமளவில் பாதிக்கப்பட்ட சண்டை கலைஞர்கள் மற்றும் நடன கலைஞர்களுக்கு  திரைப் பிரபலங்கள் பலரும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பாலிவுட் நடிகை கத்ரினா கைப் நடன கலைஞர்களுக்கு பண உதவி செய்துள்ளார். அதாவது மிகவும் வறுமையில் வாடும் 100 நடன கலைஞர்களை தேர்வு செய்து அவர்கள் வங்கி கணக்கில் தலா 10 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார். மேலும் அதனை முதலீடாக கொண்டு சிறு தொழில்களை ஆரம்பிக்கும்படியும் நடன கலைஞர்கள் சங்கம் மூலமாக கேட்டுக் கொண்டுள்ளார் 

 


Advertisement