செம்ம பிரம்மாண்டமாக அரண்மனையில் நடைபெற்ற நடிகை கத்ரீனாவின் திருமணம்! ப்பா.. அதுக்கு வாடகை எவ்வளவு பார்த்தீங்களா!!
செம்ம பிரம்மாண்டமாக அரண்மனையில் நடைபெற்ற நடிகை கத்ரீனாவின் திருமணம்! ப்பா.. அதுக்கு வாடகை எவ்வளவு பார்த்தீங்களா!!

பாலிவுட் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் கத்ரீனா கைஃப். அவரைப்போலவே பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விக்கி கெளசல். இவரும் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் காதலித்து வருவதாக கூறப்பட்டது.
மேலும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் சில காலங்களுக்கு முன்பே சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. இந்த நிலையில் கத்ரினா மற்றும் விக்கி கௌசல் இருவருக்கும் நேற்று மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் முக்கிய பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நடிகை கத்ரீனா மற்றும் விக்கி கெளசல் இருவரது திருமணம் பார்ப்போர் மலைக்கும் வகையில் மிகவும் பிரம்மாண்டமாக ராஜஸ்தானின் உள்ள சவாய் மாதோபூரில் அமைந்துள்ள சிக்ஸ் சென்ஸ் கோட்டையில் நடைபெற்றுள்ளது. மேலும் அங்கு கத்ரீனாவும், விக்கியும் தங்கியிருந்த அறையின் ஒரு நாள் வாடகை ரூ. 7 லட்சமாம். ஆனால் கத்ரீனாவிற்காக ரிசார்ட் எந்த வாடகையும் வாங்காமல் இலவசமாகவே கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.