அடடா! என்ன இப்படி சொல்லிட்டாரே!! கஸ்தூரியின் அதிரடி பதிவிற்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்!!

அடடா! என்ன இப்படி சொல்லிட்டாரே!! கஸ்தூரியின் அதிரடி பதிவிற்கு பதிலடி கொடுத்த ரசிகர்கள்!!


kasthuri-tweet-about-bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றால் சர்ச்சைகளுக்கும், சண்டைகளுக்கு எப்பொழுதுமே பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் பாத்திமா பாபு, லாஸ்லியா,நடிகை சாக்ஷி அகர்வால், ஜாங்கிரி மதுமிதா, சரவணன் மீனாட்சி கவின், அபிராமி ஐயர், பருத்தி வீரன் சித்தப்பு சரவணன், நடிகை வனிதா விஜயகுமார், இயக்குனர் சேரன், நடிகை ஷெரின், பாடகர் மோகன் வைத்யா, சாண்டி மாஸ்டர்,மாடல் தர்சன், மலேசிய பாடகர்  முகின் ராவ், ரேஷ்மா ஆகியோர் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளனர்.

kasthuri

இதனை தொடர்ந்து இரண்டாவது நாள் நடிகை மீரா மிதுனும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 3 ஆண்டுகளாக அனைவரும் தங்களது வாழ்க்கையில் நிகழ்ந்தவற்றை கூறும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

அதன்படி அனைவரும் தங்களது வாழ்க்கையில் நேர்ந்த பல சோகங்களையும் பகிர்ந்து வருகின்றனர். இதனால் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்தும், லாஸ்லியா கூறப்போவது குறித்து  நடிகை கஸ்தூரி  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார்.