எனக்கே அது நடந்திருக்கு! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை கஸ்தூரி! ஷாக்கான ரசிகர்கள்!

எனக்கே அது நடந்திருக்கு! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை கஸ்தூரி! ஷாக்கான ரசிகர்கள்!


kasthuri-talk-about-sexually-harassement-in-cinema

தமிழில் தேரோடும் வீதியிலே என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை பாயல் கோஷ். இவர் இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி வரவழைத்து, தன்னிடம் அத்துமீறி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என குற்றச்சாட்டை வைத்து பரபரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் பாலியல் குற்றச்சாட்டு குறித்த பாயல் கோஷின் டுவிட்டர் பதிவை பகிர்ந்த நடிகை கஸ்தூரி  சட்டத்தின் படி உறுதியான ஆதாரம் இல்லாமல் இதுபோன்ற பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை  நிரூபிப்பது சாத்தியமில்லாதது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட ஒருவர் அல்லது அனைவரின் பெயர்களையும் இது கெடுத்துவிடும். எதுவும் நல்லதல்ல என குறிப்பிட்டிருந்தார்.

kasthuri

இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் கஸ்தூரியிடம், இது போன்று உங்களுக்கு நெருக்கமான ஒருவருக்கு நடந்திருந்தால், இப்படித்தான் சட்டம் பேசுவீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு கஸ்தூரி நெருக்கமானவர் என்ன. எனக்கே அதுபோன்று நடந்திருக்கிறது. மூடிய கதவுகளுக்கு பின்னால் அது அப்படியே தான் இருக்கிறது என கூறியுள்ளார்.