சினிமா

பிகில் பட பாடலை படுமோசமாக கிண்டல் செய்த நடிகை கஸ்தூரி! கோபத்தில் விஜய் ரசிகர்கள்

Summary:

Kasthuri criticise bigil movie song

விஜய் அட்லீயுடன் மூன்றாவது முறையாக கூட்டணியில் இணைந்து  நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.

இப்படத்தில் பர்ஸ்ட் லுக்  போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் வருய் 'வெறித்தனம்' என்ற பாடலை விஜய் பாடுகிறார் என்ற செய்தி படக்குழுவால் அறிவிக்கப்பட்டதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 

இந்நிலையில் இன்று திடீரென பிகில் படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் இணையத்தில் திருட்டுத்தனமாக கசியவிடப்பட்டது. இந்த பாடலை ஆஸ்கார் விருது பெற்ற ஏஆர்.ரஹ்மான் இசையமைத்து அவரே பாடியுள்ளார். 

தற்போது இந்த பாடல் குறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி “லீக் ஆனா என்ன? ஏற்கனவே கேட்ட பாட்டுக்கள்தானே . புதுசா பிகில் சவுண்ட் மட்டும் சேர்த்துருக்கு. நல்லாத்தான் இருக்கு." என கிண்டல் செய்துள்ளார். இது ஏஆர். ரஹ்மான் மற்றும் பிகில் படக்குழுவினரை மிகவும் கொச்சைப்படுத்துவது போல் அமைந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கஸ்தூரியை திட்டி வருகின்றனர். 


Advertisement