விக்ரம் மற்றும் துருவ்வை ஒரே படத்தில் இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்..! சியான் 60 வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

விக்ரம் மற்றும் துருவ்வை ஒரே படத்தில் இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்..! சியான் 60 வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!



karthick-subburaj-directing-vikram-and-his-son-in-next

நடிகர் விக்ரமின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஊரடங்கு காரணமாக பட வேலைகள் நின்றுள்ளநிலையில் ஊரடங்கு முடிந்த பிறங்கு ஜகமே தந்திரம் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

vikram

அதேநேரம், நடிகர் விக்ரம் நடிக்க இருக்கும் 60 வது படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க, அனிருத் இசை அமைக்க உள்ளார். ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்புகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் இருக்கும் மாற்றகலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

vikram