
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும்
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் இரண்டாவது அலையாக அதிதீவிரமாக பரவி வருகிறது. மேலும் இதனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பிரபலங்கள் பலரும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் கார்த்தி, அன்பு தம்பிகள் அனைவருக்கும் வணக்கம். இந்த கொரோனா சூழல் இதுவரை நாம் கண்டிராத அளவுக்கு மிகக்கடுமையாக உள்ளது. அரசாங்கமும், மருத்துவர்களும் நமக்கு அறிவித்துள்ள, மாஸ்க் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல், வசிப்பிடத்தை விட்டு வெளியே செல்லாமல் இருத்தல் போன்ற பாதுகாப்பு விதிமுறைகளை தவறாமல் பின்பற்றி, தம்பிகள் ஒவ்வொருவரும் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். இதுவே இந்த பிறந்த நாளுக்கு எனக்கு நீங்கள் தரும் பரிசாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
Advertisement
Advertisement