சினிமா

நடிகர் நரேனின் பிறந்தநாள்! கார்த்தி கொடுத்த அசத்தலான ஸ்பெஷல் பரிசு! என்னன்னு பார்த்தீர்களா!!

Summary:

நடிகர் நரேனின் பிறந்தநாள்! கார்த்தி கொடுத்த அசத்தலான ஸ்பெஷல் பரிசு! என்னன்னு பார்த்தீர்களா!!

தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான, அசத்தலான நடிப்பால் அனைவரையும் பெருமளவில் கவர்ந்து வருபவர் நடிகர் நரேன். சித்திரம் பேசுதடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமான அவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். அவர் கைதி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவராலும் பாராட்டப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து நரேன் தற்போது பிரபல மலையாள இயக்குனரான சுகீத் இயக்கத்தில் ‘குரல்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது சுகீத் இயக்கும் முதல் தமிழ் படமாகும். இதில் தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த 
ஷ்ர்தா சிவதாஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பால சரவணன், காளி வெங்கட், கனிகா உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நரேனின் மாறுபட்ட கெட்டப்பில், தனித்துவத்துடன் உருவாகி வரும் குரல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடிகர் நரேனின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் குரல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 


Advertisement