சினிமா

கார்த்தி அடுத்ததாக இந்த இயக்குனருடன் இணைகிறாரா! அப்ப படம் வெற்றி தான் - கொண்டாடத்தில் ரசிகர்கள்!

Summary:

Karthi manirathnam

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் ஒருவராக திகழ்பவர் நடிகர் கார்த்தி. இவர் முதன் முதலில் பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், பல விருதுகளையும் பெற்று தந்தது.

அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜயின் பிகில் படத்துடன் கைதி என்ற திரைப்படத்தின் மூலம் மோதுகிறார். வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ள இத்திரைப்படம் ஒரு ஆக்சன் கலந்த த்ரில்லர் படமாக அமைந்துள்ளது.

இதனை அடுத்து நடிகர் கார்த்தி இயக்குனர் இமயம் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்திற்காக கார்த்தி கடும் பயிற்சி எடுத்து வருவதாக கூறப்படுகின்றது.


Advertisement