சினிமா

கஞ்சா கருப்புக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - ரசிகர்கள் அதிர்ச்சி!

Summary:

கஞ்சா karpu

தமிழில் பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் கஞ்சா கருப்பு. காமெடி நடிகராக பல படங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் தனது நடிப்பு மற்றும் பேச்சால் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்றார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்துள்ளார். பின்னர் மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஆனால் அதற்கு பின்னரும் பட வாய்ப்புகள் வரவில்லை. சில நாட்களுக்கு முன்னர் ஒரு படத்தை தயாரித்துள்ளார். அதிலும் அவருக்கு நஷ்டம் தான் ஏற்பட்டது. 

அந்த நஷ்டத்தை ஈடுக்கட்ட, தான் ஆசை ஆசையாய் கட்டிய வீட்டை விற்றுள்ளதாக கூறப்படுகின்றது.  தற்போது சொந்த வீடு கூட இல்லாமல் அவர் இருப்பதை அறிந்து பலருக்கும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 


Advertisement