சினிமா

விபத்தில் சிக்கி, தேசிய விருது பெற்ற பிரபல நடிகர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம் இரங்கல்!!

Summary:

கன்னட திரையுலகை சேர்ந்தவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள

கன்னட திரையுலகை சேர்ந்தவர் சஞ்ஜாரி விஜய். இவர் சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த 2015ம் ஆண்டு வெளியான நான் அவனள்ள அவளு என்ற படத்தில் திருநங்கையாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார். இந்நிலையில் பெங்களூருவில் வசித்து வந்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது பைக் சறுக்கி விழுந்து மின்கம்பத்தில் மோதி நடிகர் சஞ்ஜாரி விஜய் கடும் விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு கால் மற்றும் தலையில் பயங்கரமாக அடிபட்டது. இதனையடுத்து மிகவும் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

Sanchari Vijay dead

மேலும் அவரது மூளையில் ரத்த உறைவை நீக்க அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி 38 வயது நிறைந்த நடிகர் சஞ்ஜாரி விஜய் இன்று மூளைச் சாவு அடைந்துள்ளார். அதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர்முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சஞ்சாரி விஜய்யின் மறைவுக்கு கன்னட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியும், இரங்கலும் தெரிவித்து வருகின்றனர்.


 


Advertisement