சினிமா

கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த பிரபல இளம்நடிகர் மரணம்! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர், ரசிகர்கள்!!

Summary:

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் இரண்டாவது அலையா

இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவத் துவங்கியுள்ளது. இத்தகைய கொரோனோ வைரஸ்க்கு சாமானிய மக்கள் முதல் திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சில உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் நடிகர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னட சினிமாவில் இளம் நடிகராக வலம்வந்தவர் டி.எஸ்.மஞ்சுநாத். 35 வயது நிறைந்த அவர் சம்யுக்தா 2 மற்றும் கெமிஸ்ட்ரி ஆஃப் கரியப்பா போன்ற திரைப்படங்களை தயாரித்து நடித்துள்ளார்.  மேலும் தற்போது ஜீரோ பர்சன்ட் லவ் என்ற படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

இதற்கிடையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நடிகர்
டி.எஸ்.மஞ்சுநாத்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால்  அவரது உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி நடிகர் டி.எஸ்.மஞ்சுநாத் உயிரிழந்துள்ளார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement