கொரோனா எதிரொலி: பெப்சி ஊழியர்களுக்கு ₹5 லட்சம் நிதியுதவியை வழங்கிய தலைவி பட நடிகை..!
கொரோனா எதிரொலி: பெப்சி ஊழியர்களுக்கு ₹5 லட்சம் நிதியுதவியை வழங்கிய தலைவி பட நடிகை..!

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸின் கோரத்தாண்டவம் இன்று பல நாடுகளிலும் பரவி வருகிறது. இவ்வைரஸானது தற்போது இந்தியாவிலும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.
இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் அனைத்து மக்களும் தங்களது வீடுகளிலேயே முடங்கி இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. அதேபோல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால் பெப்சி ஊழியர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கங்கனா ரணாவத்.
இவர் தற்போது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் பெப்சி ஊழியர்களுக்கு ₹5 லட்சம் நிதியுதவியை வழங்கியுள்ளார்.