உதவி இயக்குனரின் கன்னத்தில் பளாரென அறைந்தாரா பிரபல சீரியல் ஹீரோ?.. பாதியில் நிறுத்தப்பட்ட சீரியல் சூட்டிங்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

உதவி இயக்குனரின் கன்னத்தில் பளாரென அறைந்தாரா பிரபல சீரியல் ஹீரோ?.. பாதியில் நிறுத்தப்பட்ட சீரியல் சூட்டிங்..! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!


kanda naal mudhal serial shooting issue

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் "கண்ட நாள் முதல்". இந்த நெடுந்தொடரில் நவீன் மற்றும் அருண் என்ற இரண்டு கதாநாயகர்கள் நடித்திருக்கும் நிலையில், ஷூட்டிங் சென்னை கிருஷ்ணா நகரில் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது மதிய உணவு இடைவெளிக்கு பின் இரண்டு ஹீரோக்களில் ஒருவரான நவீன் ஷூட்டிங்கிற்கு வராமல் தனது அறையில் இருந்ததாகவும், உதவி இயக்குனர் குலசேகரன் அங்கு சென்று அவரை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.

colors tamil serial

இதனால் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து, கோபமடைந்த நவீன், குலசேகரனை கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அடிபட்ட குலசேகரனுக்கு கண்ணுக்கு கீழ் ரத்தம் வரவே முதலுதவி அளிக்கப்பட்டது. 

colors tamil serial

மேலும் சின்னத்திரை இயக்குனர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கும் குலசேகரன் மதுரவாயில் காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, இரண்டுதரப்பினரையும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனராம்.

இதுகுறித்த தகவல் உண்மையா? என தெரியவில்லை. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக  ரசிகர்கள், "கொஞ்ச நாளாகவே இந்த சீரியலில் நடிக்க ஆர்வமில்லாதவர் போல் நவீன் இருக்கிறார்" என்று கூறுகின்றனர். அத்துடன் இந்த சீரியலின் ஷூட்டிங் இனிநடக்காதா? என அதிர்ச்சியில் கேட்டு வருகின்றனர்.