உலகநாயகனின் தந்தைக்கு சிலை திறந்து வைத்தார் கமல்ஹாசன்! சொந்த ஊரில் திரண்ட ரசிகர்கள்!

kamalhasan opened statue for his dad


kamalhasan opened statue for his dad

மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான கமல்ஹாசனின் 65-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி சினிமா ரசிகர்கள் மற்றும் காட்சி தொண்டர்கள் இணையத்தில் வாழ்த்துகளை பதிவிட்டு வந்தனர். இந்தநிலையில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார்.

kamal
இதற்காக இன்று காலை 10.30 மணிக்கு பரமக்குடிக்கு வந்த கமல்ஹாசனை மக்கள் நீதி மய்ய கட்சி நிர்வாகிகள், அவரது ரசிகர்கள் மற்றும் அந்த ஊர் பொதுமக்கள் வரவேற்றனர்.

பரமக்குடி அருகே மதுரையிலிருந்து ராமேசுவரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கமல்ஹாசனுக்கு சொந்தமான இடத்தில் அவரது தந்தை சீனிவாசனின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை கமல் ஹாசன், அவரது சகோதரர் சாருஹாசன் மற்றும் குடும்பத்தினர் திறந்து வைத்தனர்.