சினிமா

இந்த வயதிலும் கமல் இளமையாக இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? வெளியான புதிய தகவல்.

Summary:

Kamal young rakasiyam


நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் முன்னணி நடிகர். இவர் தற்போது தனியாக மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து தலைமை தாங்கி வருகிறார். மேலும் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி நடிகர் கமல் சினிமாவிலும் நடித்துவருகிறார்.64 வயதாகும் நடிகர் கமல் இன்றும் இளமையுடன் இருப்பதற்கு காரணம் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுதான் முக்கிய காரணம்.

நடிகர் கமல் தினமும் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்பவர். நேரம் கிடைக்கவில்லை என்றால் வீட்டிலேயே உடற்பயிற்சியை மேற்கொள்வார். அதுமட்டுமின்றி நடிகர் கமலுக்கு அசைவ உணவு என்றால் மிகவும் பிடிக்குமாம். அதிலும் மீன் வகைகளை அதிகம்  சாப்பிடுவார்.

மேலும் அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு வகைகளை அதிகம் சாப்பிட மாட்டார். பால் குடிப்பதை விட பிளாக் காபி அதிகம் குடிப்பாராம். இவையெல்லாம்தான் கமல் இளமையாக இருப்பதற்கு முக்கிய காரணமாம்.  


Advertisement