உலக நாயகனின் விக்ரம்.! வெளிவந்த சூப்பர் அப்டேட்! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

உலக நாயகனின் விக்ரம்.! வெளிவந்த சூப்பர் அப்டேட்! செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!Kamal vikram movie music and trailer released date announced

மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம். இப்படத்தில் உலக நாயகன் கமல் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம்  உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உருவாகும் இந்த திரைப்படம் வரும் ஜூன் 3-ம் தேதி வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது விக்ரம் படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வரும் மே 15-ந்தேதி அன்று  வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.