நடுக்கடலில் திருமணம்.! திருமண உறவிலிருந்து வெளியேறும் திரெளபதி நடிகை!!
"விஜயை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்து பல நாட்கள் ஆகிவிட்டது" மேடையில் பேசிய கமல்..
"விஜயை அரசியலுக்கு வரச் சொல்லி அழைப்பு விடுத்து பல நாட்கள் ஆகிவிட்டது" மேடையில் பேசிய கமல்..

கடந்த மாதம் லோகேஷ் கனகராஜின் LCU மெத்தட்டில் உருவாகி பாக்ஸ் ஆபீசில் மாபெரும் வெற்றி பெற்று 550கோடி ருபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது லியோ திரைப்படம். இந்நிலையில் கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் இப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது.
அவ்விழாவில் பேசிய விஜய், "2026ல் கப்பு முக்கியம் பிகிலு" என்று கூறி தனது அரசியல் வருகை குறித்து மறைமுகமாக கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாகவே விஜய் அவரது மக்கள் இயக்கம் மூலம் களப்பணியாற்றி வருவதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், கமலஹாசனும் அதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். கமல் கூறியதாவது "விஜய் அரசியலை விளையாட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது.
அரசியலுக்கு வருவதற்கான தகுதியை முதலில் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவரை அரசியலுக்கு வரும்படி அழைத்து பல நாட்கள் ஆகிவிட்டது. இவரது சித்தாந்தம் என்னுடன் ஒத்துப்போனால், நான் அரசியலில் கூட்டணி வைத்துக்கொள்வேன்" என்று கமல் கூறியுள்ளார்.