கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கமல்ஹாசன்.! எப்போது பிக்பாஸில் பங்கேற்கிறார்.?

கொரோனாவிலிருந்து குணமடைந்தார் நடிகர் கமல்ஹாசன்.! எப்போது பிக்பாஸில் பங்கேற்கிறார்.?


kamal recovered from corona

அரசியலிலும், சினிமாவிலும் தீவிரமாக இருந்து வருபவர் கமல்ஹாசன். இவர் தற்போது இந்தியன் 2 திரைப்படம் மற்றும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் அமெரிக்கா சென்றார். இதையடுத்து சென்னை திரும்பிய பிறகு அவருக்கு இருமல் இருந்துள்ளது. பின்னர் பரிசோதனை செய்ததில் கடந்த 22ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியினை, அவர் மருத்துவமனையில் இருப்பதால் அவருக்குப் பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கவிருக்கிறார் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கமல்ஹாசன் உடல்நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், கமல்ஹாசன் அவர்கள் கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமாகிவிட்டார். இருப்பினும் டிசம்பர் 3ம் திகதி வரை தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதுடன் 4ஆம் தேதிக்கு பிறகு அவர் தனது அன்றாட பணிகளில் ஈடுபடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தநிலையில் பிக்பாஸில் அடுத்த வாரம் கமல்ஹாசனை பார்க்க முடியுமா? என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.