சினிமா

என் அம்மாவிடமே அப்படி மோசமா கேட்டாங்க! சினிமாவை விட்டு விலகிய நடிகை கல்யாணி! இதுதான் காரணமா?

Summary:

தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த "அள்ளி தந்த

தமிழ் சினிமாவில் 2001 ஆம் ஆண்டு பிரபுதேவா மற்றும் லைலா நடிப்பில் வெளிவந்த "அள்ளி தந்த வானம்" என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை கல்யாணி. அதனை தொடர்ந்து அவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ஜெயம் படத்தில் நடிகை சதாவின் தங்கையாக நடித்து பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து சின்னத்திரை பக்கம் களமிறங்கிய கல்யாணி ஆண்டாள் அழகர், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். வெள்ளித்திரை படங்களில் கதாநாயகியாக வலம் வருவார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் கல்யாணி திருமணமாகி குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்டார். 

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், குழந்தை நட்சத்திரம் போல  ஹீரோயினாக நடிப்பது அவ்வளவு எளிதல்ல. கதாநாயகியாக நடிக்க வேண்டுமென்றால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரிடமும் அட்ஜஸ்ட் செய்ய வேண்டுமென என் அம்மாவிடமே கேட்டுள்ளார்கள். இந்நிலையில் அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு வேண்டாம் என நான் சினிமாவை விட்டு விலகி கொண்டதாக அவர் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Advertisement