காக்கா முட்டை பட பாணியில் சென்னையில் நடந்த கொடூர சம்பவம்! காலை இழந்த இளைஞர்!

காக்கா முட்டை பட பாணியில் சென்னையில் நடந்த கொடூர சம்பவம்! காலை இழந்த இளைஞர்!


kakka-muttai-movie-scene-happned-in-chennai

இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் இணைந்து தயாரித்த திரைப்படம் காக்கா முட்டை. கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார்.

ஒரு பீட்ஸா சாப்பிடுவதற்காக இரண்டு சிறுவர்கள் படும் கஷ்டம் பின்னர் அவர்கள் எப்படி பீட்ஸா சாப்பிட்டார்கள் என கதை படமாக்கப்பட்டிற்கும். இந்த படத்தில் சிறுவர்கள் சிலர் ரயில் படிக்கட்டில் அமர்ந்து செல்லும் பயணிகள் பயன்படுத்தும் செல்போனை கம்பால் அடித்து புடுங்குவார்கள்.

Ishwarya rajesh

அதேபோல் இன்று சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னையில் இருந்து நெல்லூருக்கு செல்லும் ரயிலில் படியில் நின்றபடி இளைஞர் ஒருவர் பயணம் செய்துள்ளார். சென்னை திருவெற்றியூர் அண்ணாமலைநகர் ரயில்வே கேட் அருகே ரயில் மெதுவாக சென்ற போது கீழே இருந்த 3 சிறுவர்கள் கம்பால் அவரிடம் இருந்த செல்போனை தாக்கியுள்ளனர்.

இதனால் நிலைகுலைந்த அந்த இளைஞர் கீழே விழுந்ததில் ரயில் சக்கரத்தில் சிக்கி அவரது கால்கள் துண்டாகியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.