காஜல் அகர்வால் இப்படி இருப்பதற்கு காரணம் என்ன தெரியுமா? அவரே கூறிய விஷயம்!



kajal agarwal talk about her lifestyle


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தநிலையில் அவரது உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கம் குறித்து காஜல் கூறியுள்ளார்.

kajal agarwal

அவர் கூறுகையில், உடற்பயிற்சி செய்யாமல் என்னால் இருக்க முடியாது. காலையில் எழுந்ததும் அரை மணிநேரம் உடற்பயிற்சி செய்வேன். அதன்பிறகு உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்ச்சி ஏற்படும். தொடர்ச்சியாக 150 முறை சூரிய நமஸ்காரம் செய்வேன். அதனைத்தொடர்ந்து நீச்சல் பயிற்சியும் செய்வேன் என கூறியுள்ளார். உணவு பழக்கத்தில், காலை உணவாக ஓட்ஸ், பிரட், மதிய உணவுக்கு சாதம், காய்கறிகள், பழங்கள் சாப்பிடுவேன். இரவு சாப்பாட்டிலும் காய்கறிகள் இருக்கும் என கூறியுள்ளார்.