சினிமா

இந்தியன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து! காஜல் அகர்வாலின் அதிரடி முடிவால் பெரும் அதிர்ச்சியில் படக்குழு!

Summary:

kajal agarwal shock in shootingspot accident

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் இந்தியன்-2. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் ஈவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவந்தது, இந்த படப்பிடிப்பின்போது செட் அமைக்கும் பணி நடைபெற்ற நிலையில் ராட்சச கிரேன் அறுந்து விழுந்து உதவி இயக்குனர் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

 படப்பிடிப்பில், கமல், இயக்குனர் சங்கர், நடிகை காஜல் அகர்வால் அனைவரும் இருந்துள்ளனர். இது படப்பிடிப்பில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. படப்பிடிப்பில் நடைபெற்ற இந்த கோர விபத்தை நேரில் கண்ட நடிகை காஜல் அகர்வால்,தனது கண் முன்னே 3 பேர் உயிரிழந்ததால் மனதளவில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளார். 

விபத்து நடந்த பின்பு வீட்டிற்கு சென்ற அவர் அதன்பிறகு வீட்டை வெளியே எங்கும் செல்லவில்லையாம். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மட்டும் கலந்துகொண்டாராம்.

இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இன்னும் இருவாரத்திற்கு படப்பிடிப்பிற்கு என்னால் வரமுடியாது என கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியன் 2 படப்பிடிப்பில் தற்போது காஜல் அகர்வால் நடிக்கவேண்டிய காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் காஜல் அகர்வால் இவ்வாறு கூறியுள்ளதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.


Advertisement--!>