35 வயதில் தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்! வைரல் புகைப்படம்.

35 வயதில் தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய நடிகை காஜல் அகர்வால்! வைரல் புகைப்படம்.


Kajal agarwal bachelor party celebration photos

இந்த மாத இறுதியில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் நடிகை காஜல் அகர்வால் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். தமிழில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் உருவான பழனி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து விஜய் அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

kajal agarwal

தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காஜல் அகர்வால். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளம் மூலம் தனக்கு திருமணம் ஆக இருக்கும் செய்தியை வெளியிட்டு இருந்தார் காஜல் அகர்வால்.

அதில், வரும் அக்டோபர் 30 ஆம் தேதி தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் தற்போது தனது தோழிகளுடன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாடி உள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

35 வயதாகும் நடிகை காஜல் அகர்வால் இன்னும் சில வாரங்களில் திருமணம் செய்துகொள்ள இருக்கும் நிலையில் தற்போது அவரது பேச்சிலர் பார்ட்டி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

kajal agarwal

kajal agarwal

kajal agarwal