கடவுளையே பிசியாக்கிய ஜ.வி.பிரகாஷ்! முரட்டு சிங்கிளின் மோசன் போஸ்டர்kadhalika-yarumillai-moster-poster

ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று காலை வெளியானது. இதனைத் தொடர்ந்து இந்த காதலிக்க யாருமில்லை படத்தின் மோசன் போஸ்டர் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் தற்போது அதிக படங்களில் நடித்து வருபவர் யார் என்றால் அது ஜி.வி.பிரகாஷ் தான். காதல் 100 சதவீதம், குப்பத்து ராஜா, ஜெயில், வாட்ச்மேன் உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்வம் தாளமயம் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

gv prakash

இதனைத் தொடர்ந்து இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - ரைசா வில்சன் நடிக்கும் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. படப்பிடிப்பு தொடங்கியது முதலே இது மொரட்டு சிங்கிள்ஸ்-க்கான படம் என்று விளம்பரப்படுத்தி வந்த படக்குழு தற்போது ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோசன் போஸ்டரை வெளியிட்டுள்ளது.