மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து உண்மையை உடைத்த முக்கிய அமைச்சர்! செம ஹேப்பியில் கொண்டாடும் தளபதி ரசிகர்கள்!

அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் மாஸ்டர் படம் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார்.


kadampur-raju-talk-about-master-release

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். இப்படத்தில்  கதாநாயகியாக மாளவிகா மோகன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் அவர்களுடன் ஆன்ட்ரியா, கௌரி கிஷன், சாந்தனு , மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவுற்ற நிலையிலும், நாடு முழுவதும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் படம் வெளியாகாமல் இருந்தது. இதற்கிடையில் தற்போது தியேட்டர்களை திறக்க அரசு அனுமதி வழங்கிய நிலையில் பொங்கல் ஸ்பெஷலாக மாஸ்டர் திரைப்படம் வெளியாகலாம் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது. 

 

இந்த நிலையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில், மாஸ்டர் திரைப்படம் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம், 13ஆம் தேதி வெளியாக உள்ளது. அதற்குள் கொரோனாவே  போய்விடும் என கூறியுள்ளார்.  நம்பிக்கை கொடுத்து அவர் பேசிய அந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட தளபதி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.