
பிக்பாஸ் அல்டிமேட்டிலிருந்து வெளியேறிய ஜுலி வெளியிட்ட முதல் பதிவு! அப்படி என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களை பெருமளவில் கவர்ந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்நிலையில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.
24 மணி நேரமும் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். பின் சில காரணங்களால் அவர் விலகவே அவருக்கு பதில் தற்போது சிம்பு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் வீட்டிற்குள் ஜுலி, நிரூப், பாலா, தாமரை, ரம்யா, அபிராமி ஆகியோரே இருந்த நிலையில், நேற்று முதல் நாள் நடந்த எவிக்ஷனில் அபிராமி வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து நேற்று ஜூலி எலிமினேட் ஆனார்.
இந்நிலையில் எலிமினேஷனுக்கு பிறகு ஜுலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், முடிவில் நீங்கள் எதைப் பெறுகிறீர்கள் என்பதில் வெற்றி குறைவுதான். ஆனால் பயணத்தில் நீங்கள் யாராக மாறுகிறீர்கள் என்பதிலே வெற்றி அதிகம் என கூறியுள்ளார். அந்த பதிவு வைரலாகி வருகிறது.
Advertisement
Advertisement