வாவ்.. சிறுவயதில் நடிகை ஸ்ரீ தேவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜோதிகா, நக்மா.! அட.. எப்படியிருக்காங்க பார்த்தீங்களா!!

வாவ்.. சிறுவயதில் நடிகை ஸ்ரீ தேவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஜோதிகா, நக்மா.! அட.. எப்படியிருக்காங்க பார்த்தீங்களா!!


jothikanagma-take-photo-with-actress-sri-devi-in-childh

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கேயும் ஏராளமான படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவருக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஸ்ரீதேவி பிரபல தயாரிப்பாளரான போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பல நடிகைகளுக்கும் ரோல் மாடலாக விளங்கி வந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு  மரணமடைந்தார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Sri devi

இந்த நிலையில், பிரபல நடிகை ஜோதிகா நடிகை ஸ்ரீதேவியுடன் சிறு வயதிலேயே எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது பெருமளவில் வைரலாகி வருகிறது. அந்தப் புகைப்படத்தில் நடிகை ஸ்ரீதேவியுடன் ஜோதிகா மட்டுமின்றி அவரது சகோதரிகள் நக்மா மற்றும் ரோஷினி ஆகியோரும் உள்ளனர்.

Sri devi