ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
"குஷி படத்தில் அந்த மாதிரி நடித்ததற்கு எஸ் ஜே சூர்யா தான் காரணம்" நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்த ஜோதிகா..
கோலிவுட் திரையுலகில் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் அஜித் நடித்த 'வாலி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதன் பிறகு எஸ் ஜே சூர்யா, விஜய் நடிப்பில் ஜோதிகா கதாநாயகியாக நடித்த 'குஷி' திரைப்படத்தை இயக்கினார்.

'குஷி' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இதனால் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக எஸ் ஜே சூர்யா இருந்தார். தற்போது 'குஷி' திரைப்படம் குறித்து ஜோதிகா பேட்டியில் சுவாரஸ்யமான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அதாவது சமிபத்தில் பேட்டியில் கலந்து கொண்ட ஜோதிகாவிடம் தொகுப்பாளினி குஷி திரைப்படத்தில் என்ன கதை இருக்கிறது என்று நடிக்க ஒப்புக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, குஷி படம் காதல் கதை தான் என்றாலும் அது எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் மேஜிக் போல் திரையிடப்பட்டது. அதனால் எஸ் ஜே சூர்யாவின் இப்படம் மிகப்பெரிய ஹிட்டானது.

இந்தப் படத்தில் என்னுடைய நடிப்பைக் குறித்து பலர் கூறும் போது எனக்கு பெருமையாக இருக்கும். என்னை அந்த அளவுக்கு ஈகோ இருக்கும் பெண்ணாக நடிக்க சொன்னது எஸ் ஜே சூர்யா தான். இந்த பாராட்டு அவரையே சேரும் என்று ஜோதிகா கூறினார்.