ரசிகர்களுக்காக நான் இதை செய்வேன்! நடிகர் அஜித்தின் அதிரடியான முடிவு.
தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படுபவர் நடிகர் அஜித். இவரின் படங்களாகட்டும் சரி பிறந்த நாள் விழாவாகட்டும் அதனை ரசிகர்கள் திருவிழா கோலம் போல கொண்டாடுவர்கள்.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம், நேர் கொண்ட பார்வை படங்கள் பெண்ணியத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இதனால் தற்போது தல அஜித்துக்கு என்று தனி பெண் பட்டாளம் உருவாக ஆரம்பித்து விட்டது.
இந்நிலையில் தற்போது நடிகர் அஜித்தை பற்றி ஜிம் டிரைனர் சிவக்குமார் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். அதாவது தல தனது உடம்பை பிட்டாக வைத்து கொள்வதற்கு முக்கிய காரணம் ரசிகர்கள் தான் என கூறியுள்ளார்.
மேலும் நான் அவரிடம் இவையெல்லாம் வேண்டாம். உங்கள் உடம்பை வறுத்தி கொள்ள வேண்டாம் என கூறுவேன். அதற்கு அவர் நான் உடற்பயிற்சி செய்தால் என்னை ஃபாலோ செய்து ரசிகர்களும் உடற்பயிற்சி செய்வார்கள் என கூறியுள்ளார்.