என்னது.. பிக்பாஸ் போட்டியாளர் இறந்துவிட்டாரா.! பிரபல இசையமைப்பாளர் வெளியிட்ட ஷாக் பதிவு!



jemes-vasanthan-tweet-about-bigboss-contestants-dead

90ஸ் கிட்ஸ்களுக்கு பரிச்சயமான பல தொகுப்பாளர்களில் பிரபலமாக இருந்தவர் ஜேம்ஸ் வசந்தன். அவர் பிரபல தொலைக்காட்சிகளில் ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதன் பிறகு அவர் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணயம், ஈசன், நாகராஜசோழன் MLA போன்ற பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் போட்டியாளர்கள் குறித்து பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகிறார். மேலும் இந்த சீசனிலும் பிக்பாஸ் குறித்து கமெண்ட் போட்டு வருகிறார்.

james vasanthan

இந்நிலையில் சமீபத்தில் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் ‘நேற்று இரவு ஒரு முன்னாள் Bigg Boss நிகழ்ச்சி பங்கேற்பாளர் விபத்தில் இறந்து போவதாக கனவு கண்டேன். T. Nagar-ல் உள்ள ஒரு பழைய கட்டிடத்தில் 5-வது மாடியில் இறுதிச் சடங்கு நடக்கிறது. நான் அவரைக் குறித்து எதுவுமே சிந்தித்தது கூட கிடையாது. எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு இல்லை. நேரில் சந்தித்திருக்கிறேனா என்பது கூட நினைவில்லை.இது எப்படி நிகழ்ந்தது? என்று பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில் இப்பதிவை கண்ட பலரும் நீங்கள் பிக்பாஸ் குறித்து நினைத்துக்கொண்டே தூங்கியிருப்பீர்கள். அதனால்தான் இப்படியெல்லாம் கனவு வருது உள்ளிட்ட பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.