அடேங்கப்பா.. 18 கிலோ எடையை குறைத்த ஜெயம் ரவி! என்ன 2 வாரம் இதுமட்டும்தான் சாப்பிட்டாரா??jayamravi-reduce-18-kilo-weight-for-comali-movie

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஜெயம் ரவி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவான அவரது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் அருள்மொழி வர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது.

ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று சூப்பர் ஹிட்டான திரைப்படம் கோமாளி. இந்தப் படத்தில் ஜெயம் ரவி பள்ளி மாணவராக நடித்திருப்பார். அதில் அவர் பார்ப்பதற்கு சிறு பையன் போல இருப்பார். அவ்வாறு மாறுவதற்காக ஜெயம் ரவி 18 கிலோ எடையை குறைத்துள்ளாராம்.

Jayam ravi

இதுகுறித்து அவர் கூறுகையில், உடல் எடையை குறைப்பதற்காக இருவாரம் கேரட் மற்றும் தக்காளி மட்டுமே சாப்பிட்டேன். எப்போதாவது பிளாக் காபி குடிப்பேன். அதனாலேயே 18 கிலோ எடை குறைந்தது எனக் கூறியுள்ளார். மேலும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேறு யாரும் இதை செய்ய வேண்டாம் எனவும் ஜெயம் ரவி கூறியுள்ளார்.