அந்த தெய்வத்தின் மகனா இவர்.? காருக்குள் செம்ம ஜாலி... வைப் செய்யும் விஜய் மகன் ஜேசன் விஜய்.!jason-sanjay-dancing-video-wit-friemds-went-viral-on-so

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போது லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்  இவர் அந்த திரைப்படத்தை தொடர்ந்து  வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

தளபதி விஜய்க்கு சங்கீதா என்ற மனைவியும்  ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா ஷாஷா என்ற மகளும் இருப்பது அனைவரும் அறிந்ததே. இவரது மகள் தெறி படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்க்கு ஹீரோவாக பல வாய்ப்புகள் வந்தாலும்  இயக்குனராவது தான் தனது லட்சியம் எனக் கூறி  அமெரிக்கா சென்று படங்கள இயக்குவது பற்றிய படிப்பை முடித்து வந்தார்.

thalapathyvijay

தற்போது குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதனால் விரைவிலேயே இவர் இயக்குனராக அறிமுகம் ஆவார் என தளபதி ரசிகர்களும் சினிமா உலகினரும் காத்திருக்கின்றனர். சமீபத்தில் கூட பிரேமம் படை இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ஜேசன் சஞ்சயை திரைப்படத்தில்  நடிக்க அழைத்தபோது தனக்கு நடிப்பில் ஆர்வமில்லை என மறுத்துவிட்டார் என்பது நாம் அறிந்ததே.

இந்நிலையில் விஜயின் மகன் ஜேசன் சஞ்சயின் வீடியோ ஒன்று தற்போது சமூக நல வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் யுவன் சங்கர் ராஜாவின் இசைக்கு  ஜேசன் சஞ்சய் தனது ஆண் மற்றும் பெண் நண்பர்களுடன் காருக்குள் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்றாலும் தற்போது ஏன் வைரலாகி இருக்கிறது என தெரியவில்லை.