ஒருபக்க மீசை தாடியுடன் உலா வரும் பிரபல கிரிக்கெட் வீரர் காலிஸ்! என்ன காரணம் தெரியுமா?

ஒருபக்க மீசை தாடியுடன் உலா வரும் பிரபல கிரிக்கெட் வீரர் காலிஸ்! என்ன காரணம் தெரியுமா?


Jaque kallis with half beard and mustache

தென்னாப்பிரிக்கா அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் ஒருபக்க தாடி மற்றும் மீசையுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

பொதுவாக ஏதாவது போட்டியில் தோல்வியடைந்துவிட்டால் ஒருபக்க மீசை மற்றும் தாடியை எடுத்துகொள்ள வேண்டும் என பலர் சவால் விடுவர். இதையே அனைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு யுக்தியாக பயன்படுத்தியுள்ளார் பிரபல கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ். 

Jaque kallis

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான காலிஸ் உலகின் தலைசிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக பல ஆண்டுகள் இருந்து வந்தார். ஐபிஎல் தொடரிலும் தென்னாப்பிரிக்கா அணிக்காக ஆடியுள்ளார். 

இவர் தற்போது தென்னாப்பிரிக்காவில் வாழும் காண்டாமிருகங்களை பாதுகாப்பதற்கென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளார். இந்த விழிப்புணர்வு குறித்து மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக தனது ஒருபக்க மீசை மற்றும் தாடியை ஷேவ் செய்துள்ளார். 

தனது இந்த வித்தியாசமான தோற்றத்தை ஜாக் காலிஸ் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்தும் அவரை பாராட்டியும் வருகின்றனர்.