தமிழகம் சினிமா

கண்ணீர் விட்டு கதறி அழுத ஜிபி முத்து! நடந்தது என்ன! வைரலாகும் வீடியோ காட்சி...

Summary:

கண்ணீர் விட்டு கதறி அழுத ஜிபி முத்து! நடந்தது என்ன! வைரலாகும் வீடியோ காட்சி...

டிக் டாக் பிரபலம் ஜி.பி முத்து கதறி அழுத வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்ற பொழுதுபோக்கு செயலி டிக்டாக். இதில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி பலரும் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.

டிக்டாக் செயலியில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு மக்களிடையே பிரபலமானவர் திருச்செந்தூர் உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி.முத்து. இவர் எதார்த்தமான நகைச்சுவையான பேச்சால் மக்களை பெருமளவில் ஈர்த்தார்.

தற்போது இவர் படங்களில் கூட சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். எல்லோரையும் சிரிக்க வைக்கும் குணம் உடைய இவர் தற்போது கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், மக்களே அனைவரையும் சிரிக்க வைத்த என்னை ஆண்டவன்  அளவைத்து விட்டான். என்னோட உயிர் நண்பன் என்னை விட்டு போய் விட்டான் என தன்னுடைய நண்பரின் மறைவிற்கு கண்கலங்கி அழுதுள்ளார் ஜி பி முத்து. மேலும் ஜாதி மதம் பார்க்காமல் பழகினோம். உண்மையாகவே ஆண்டவன் என ஒருவன் இல்லை. எனது குழந்தைகளுக்கும் அவனை ரொம்ப பிடிக்கும்.

ஆனால் இன்னைக்கு என் நண்பன் என்னோட இல்லை என நண்பனின் மறைவு குறித்து ஜி பி முத்து கண்ணீர் விட்டு அழுத வீடியோ ரசிகர்களையும் கண்கலங்க வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ காட்சி...


Advertisement