சினிமா

ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ... ஐஸ்வர்யா வெளியிட்ட ட்விட்டால் பயத்தில் ரசிகர்கள்...

Summary:

ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஆகிவிடுமோ... ஐஸ்வர்யா வெளியிட்ட ட்விட்டால் பயத்தில் ரசிகர்கள்...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அழகிய தம்பதியினராக வலம் வந்த இவர்களுக்கு இருமகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்தனர். 

இச்செய்தி ரசிகர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து தனுஷ் தனது பட சூட்டிங்கிலும், ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் தயாரிக்கும் பணியிலும் பிஸியாக இருந்து வந்தனர். இந்நிலையில் பயணி என்ற வீடியோவை காதலர் தினத்தன்று வெளியிட இருந்தார்.

ஆனால் அப்போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் மகளிர் தினத்தன்று வெளியிட உள்ளதாக அறிவித்தார்.மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதிக்கு முந்தைய நாள் 7 ஆம் தேதி உடல் நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மார்ச் 17ம் தேதி பயணி வீடியோ வெளியாகும் என்று ஐஸ்வர்யா ட்வீட் செய்துள்ளார்.

இத்தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும், ஐஸ்வர்யாவுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற அச்சத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே முதலில் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியம் தான் முக்கியம். தனுஷை பிரிந்ததில் இருந்து நீங்கள் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்கிறீர்கள்.அதுமட்டுமின்றி நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பது போன்றும் தெரிகிறது. வேலைக்கு பிரேக் விட்டுவிட்டு ஓய்வு எடுங்கள் என்று தனுஷ் மற்றும் ரஜினி ரசிகர்கள் ஐஸ்வர்யாவிடம் தெரிவித்துள்ளனர்.


Advertisement