விஜய் பட நடிகை கேட்ட ஒத்த கேள்வி! பொங்கியெழுந்த தல ரசிகர்கள்.!

விஜய் பட நடிகை கேட்ட ஒத்த கேள்வி! பொங்கியெழுந்த தல ரசிகர்கள்.!


isha-kopikar-make-angry-to-ajith-fans

தமிழ் சினிமாவில் நடிகர் விஜயகாந்த் நரசிம்மா, விஜயுடன் நெஞ்சினிலே மற்றும் அரவிந்த்சாமியுடன் என் சுவாசக் காற்றே ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை இஷா கோபிகர். அதனை தொடர்ந்து அவர் தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார். 

இந்நிலையில் இஷா கோபிகர்  தமிழில் பி.எஸ் மித்ரன் இயக்கத்தில்  மீண்டும் நடிக்கவுள்ளார்.ஏலியன்களை மையமாக கொண்ட இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கிறார்.

Ajith

இந்நிலையில் இதுகுறித்து ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இஷா கோபிகர் கூறியதாவது, சிவகார்த்திகேயனை பார்க்கும்போது எனக்கு நடிகர் ரஜினி சார் நினைவுக்கு வருகிறார். சிவகார்த்திகேயன் நடை, நடவடிக்கை, பேச்சு அனைத்தும் ரஜினி சாரை போலவே உள்ளது என கூறியுள்ளார்.

 எனக்கு மிகவும்  பிடித்த நடிகர் அரவிந்த் சாமிதான், மேலும் என்னுடன் நடித்த நடிகர் விஜய் பிரபலமாகி தமிழ் திரையுலகில் முதலிடத்தில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.

Ajith

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்து அவரிடம் கேட்டபோது ’அஜித் இன்னும் நடிக்கிறாரா’ என்று கேட்டுள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தமிழ் நடிகர் தல அஜித்தை பற்றியே தெரியாமல் ஏன் தமிழில் நடிக்கிறீர்கள் என ஆவேசமாகியுள்ளனர்.