சினிமா

அண்ணாத்த படம் ட்ராப்..? படத்தில் இருந்து ரஜினிகாந்த் விலகிவிட்டாரா..? தீயாய் பரவும் வதந்தி.!

Summary:

Is annaththa movie dropped latest rumor in Kodambakam

அண்ணாத்த படத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் விலகிவிட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. கொரோனா ஊரடங்கிற்கு முன் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடங்கப்பட்டநிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்ணாத்த திரைப்படம் டிராப் என்றும், படத்திற்காக ரஜினி வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பி கொடுத்துவிட்டதாகவும் கோலிவுட் திரையுலகில் ஒரு வதந்தி பரவி வருகிறது. கொரோனா காரணமாக மூட்டப்பட்டுள்ள திரையங்குகள் மீண்டும் திறக்கப்பட்டாலும் எந்த அளவிற்கு ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள் என்பது தெரியவில்லை.

இதனால் பெரிய நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்கவேண்டும் என கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணாத்த படத்திற்கான சம்பளத்தை குறைத்துக்கொள்ளுமாறு தயாரிப்பு நிறுவனம் ரஜினியிடம் கேட்டதாகவும், ஆனால் அதற்கு சம்மதம் தெரிவிக்காத ரஜினி வாங்கிய அட்வான்ஸ் தொகையை திருப்பிக்கொடுத்துவிட்டு படத்தில் இருந்து விலகியதாகவும் கூறப்படுகிறது.

ஆனால்  இது வெறும் வதந்தி எனவும், அண்ணாத்த படத்தில் ரஜினியின் காட்சிகள் 50% கும் மேல் படமாக்கப்பட்டுவிட்டதாகவும், அடுத்தவருடம் படம் வெளியாகும் எனவும் ஒருதரப்பினர் கூறிவருகின்றனர். இதுகுறித்து அண்ணாத்த படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தால் மட்டுமே உண்மை என்ன என்பது தெரியவரும்.


Advertisement