சினிமா

தன்னுடைய பிறந்த நாளை தளபதி விஜயுடன் கொண்டாடிய நடிகை இந்துஜா - புகைப்படங்கள் உள்ளே.

Summary:

Indhuja vijay birthday celebration

தமிழ் சினிமாவில் வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்த மேயாத மான் திரைப்படத்தில் நடிகர் வைபவ் அவர்களுக்கு தங்கையாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா. அந்த படத்தில் நடிகை பிரியாவை விட அதிகம் பேசப்பட்டவர் நடிகை இந்துஜா.

மேலும் மேயாதமான் படத்தை தொடர்ந்து பல பட வாய்ப்புகள் நடிகை இந்துஜாவுக்கு குவிய தொடங்கின. அதன் பின் பூமராங், மெர்குரி, பில்லா பாண்டி, மகாமுனி போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் விஜயுடன் பிகில் படத்தில் நடித்துள்ளார்.

அப்போது ஷுட்டிங் சமயத்தில் நடிகை இந்துஜா தனது பிறந்த நாளை தளபதி விஜயுடன் கொண்டாடியுள்ளார். மேலும் தற்போது அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி நெகிழ்ச்சியாக சிலவற்றை கூறியுள்ளார். அதில் இந்த வருடம் என்னுடைய பிறந்தநாள் ரகுமான் சாருடன் கொண்டாடியதால் மிகவும் விலைமதிப்பற்றதாகி உள்ளது. இதை ஏற்படுத்திய விஜய் சாருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.


Advertisement