கேப்டன் மகனின் படத்திற்கு வந்த சிக்கல்.! தள்ளிப்போன ரிலீஸ் தேதி.! என்ன காரணம்??
கானம் பாடிய வானம்பாடியே..! மறைந்த எஸ்.பி.பிக்கு இசையாலேயே அஞ்சலி செலுத்திய இளையராஜா! கண்கலங்க வைக்கும் பாடல்வரிகள்!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்கள் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இந்த மரணம் பலரையும் சோகத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜா, பாலு..சீக்கிரம் எழுந்து வா, உன்னை பார்க்க நான் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். ஆனால் நீ கேட்கல,எங்க போன? என உருக்கமாக பேசி நேற்று வீடியோ வெளியிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து அவர் தனது ஆருயிர் நண்பனான எஸ்பிபி க்கு இசையாலேயே அஞ்சலி செலுத்தியுள்ளார்.அதற்காக தானே இசையமைத்து பாடல் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பாடல் இதோ..
கானம் பாடிய வானம் பாடியே உன் கீதம் இன்று ஏன் மவுனமானதோ?
உன் ராக ஆயுள் இன்று அமைதியானதோ.. அமைதியானதோ...
பாடி பாடியே அன்பை வளர்த்தாய்... போற்றி போற்றியே தெய்வத்தை துதித்தாய்...
இசை எனும் வானில் திசையை அளந்தாய்.... இன்னுயிர் யாவையுமே பாடியே தீர்த்தாய்..
காலம் கடந்து உந்தன் உயிரின் ஓசை காற்று மண்டலத்தில் வசித்தாலும்...
கண்ணெதிரே உனை காணும் வரம் கிடைக்குமா? மீண்டும் வரம் கிடைக்குமா?
அஞ்சலி... அஞ்சலி... பாடும் நிலவுக்கு மவுன அஞ்சலி! அஞ்சலி... அஞ்சலி... பாடும் நிலவுக்கு மவுன அஞ்சலி!