தமிழகம்

2 குழந்தைகளை விட்டுவிட்டு திருட்டுத்தனமாக 2 -வது திருமணம்!! பெண் கூறிய காரணத்தை கேட்டா தலைசுற்றி போயிருவீங்க!!

Summary:

husband complaint on wife for second marriage

தக்கலை அருகே காஞ்சாம்புரம் வயக்கல்லூர் காவடி பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ்குமார் . இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் எனக்கு ப்ரீத்தி என்ற பெண்ணுடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலைக்காக வெளிநாடு சென்ற நிலையில், எனது மனைவி வேறு நபருடன் தகாத முறையில் பழகி வந்தார். 

அதனை தொடர்ந்து அவர்  கடந்த மே மாதம் என்னையும் எனது குழந்தைகளையும் விட்டுவிட்டு சென்றுவிட்டார். மேலும் அந்த வாலிபரை திருட்டுதனமாக இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் எனது மனைவியின் உண்மையான பெயர் ப்ரீத்தி.ஆனால் என்னிடம் அவரது குடும்பத்தினர் சிந்து என பொய் கூறியுள்ளனர் .அதுமட்டுமின்றி திருமணத்தின் போது அவருக்கு வயது 17 ஆனால் என்னிடம் 22 வயது என பொய் கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர் என்று குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

அதனை தொடர்ந்து ப்ரீத்தியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அவர் எனது தாயாரின் பெயர்தான் சிந்து. எனக்கு என் குடும்பத்தினர் 17 வயதிலேயே திருமணம் செய்துவிட்டனர், அப்பொழுது எனக்கு எதுவும் தெரியாது எனது தாயார்தான் அவரது பிறப்பு சான்றிதழில் காண்பித்து எனக்கும் ரமேஷ் குமாருக்கும் திருமணம் செய்து வைத்தார் என நினைக்கிறேன் என கூறியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


 


Advertisement