விஜயகாந்த் சாரால் தான் எல்லாமே கிடைச்சுது.. மனம் திறந்த விருமாண்டி பட நடிகை..! உலகநாயகனின் பக்கா ஐடியா..!! https://cinereporters.com/kamalhaasan-advised-abirami-to-follow-vijayakanth/

நடிகர் கமலஹாசன் இயக்கி தயாரித்து நடித்த திரைப்படம் தான் விருமாண்டி. இதில் விருமாண்டிக்கு சண்டியர் என முதலில் பெயரிடப்பட்ட நிலையில், பின்னர் சர்ச்சை காரணமாக அது விருமாண்டி என மாற்றி அமைக்கப்பட்டது. இந்த படத்தில் கமலுடன் பசுபதி, நெப்போலியன் உட்பட பல திரையுலக நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். 

கமலுக்கு ஜோடியாக அபிராமி நடித்திருந்தார். தூக்கு தண்டனை தவறு என்கிற கருத்தினை வலியுறுத்தி மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் விஷயத்தை பின்னணியாக வைத்து படம் காட்சிப்படுத்தப்பட்டது. இப்படத்தில் மதுரை வட்டார மொழியே அதிக அளவில் பேசப்பட்டிருக்கும். 

kamalhaasan

இந்நிலையில் விருமாண்டியில் நடித்த அபிராமி, சமீபத்தில் அமைந்துள்ள பேட்டியில், படத்தில் நான் நடிப்பது முடிவானதும் கமல் என்னிடத்தில் "நீ மதுரை தமிழை பேச வேண்டும்" என்று தெரிவித்தார். மேலும், விஜயகாந்த் எப்படி பேசுவாரோ அதனை நன்றாக கவனித்து, அதனைப் போலவே பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். "நானும் விஜயகாந்த் சாரின் சில படங்களை பார்த்து எப்படி பேசுகிறார் என்பதை உள்வாங்கி பேசினேன்" என்று தெரிவித்தார்.