வலி நிவாரண மாத்திரைகளை அதிகளவு உட்கொண்டு உயிரிழந்த பிரண்ட்ஸ் தொடர் நடிகர்: பரிசோதனையில் அதிர்ச்சி உண்மை.!



Hollywood Actor Metthew Died after Consumption of Pain Killer Tablets 

 

அமெரிக்காவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் மேத்யூ பெர்ரி. இவர் கடந்த அக்டோபர் மாதம் தனது வீட்டின் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். 

அவரின் சடலத்தை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேத்யூவின் மரணம் தொடர்பாக விசாரணை நடந்து வந்தது. 

இந்நிலையில், பிரேத பரிசோதனையில் நடிகர் மேத்யூ அளவுக்கு அதிகமாக வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டதே மரணத்திற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது. 

Latest news

நடிகர் மேத்யூ எதற்காக வலி நிவாரண மாத்திரைகளை உட்கொண்டார்? போதைக்காக எடுத்துக்கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை தொடருகிறது. 

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் பிரண்ட்ஸ் என்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மேத்யூ பெர்ரி பிரபலமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.