இந்தியா சினிமா விளையாட்டு

தமிழ் சினிமாவில் சந்தானத்துடன் களமிறங்கும் ஹர்பஜன் சிங்! படுகுஷியில் சிஎஸ்கே ரசிகர்கள்!

Summary:

harpajan act with santhanam in tamil movie


இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜனுக்கு இந்திய அளவில் தமிழகத்திலே அதிகப்படியான ரசிகர்கள் உள்ளனர். அதற்கு காரணம் தீவிர ரசிகர்களை கொண்ட சிஎஸ்கே அணியில் ஹர்பஜன் சிங் ஆடியது தான். சிஎஸ்கே அணியில் அணியில் ஆடியபிறகு ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு செய்து தமிழக ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரைப்படங்கள் குறித்து பதிவிட்டு வந்த ஹர்பஜன் சிங், தற்போது தான் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாவதையும் பதிவிட்டுள்ளார். டிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிக்க  ஹர்பஜன் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் இந்த படம் மூலம் கோலிவுட்டில் ஒரு நடிகராக களம் இறங்குகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இதனை டுவிட்டரில் தெரிவித்துள்ளனர். ஹர்பஜன் சிங்குடன் சேர்ந்து செயல்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஹர்பஜன் சிங்கை வரவேற்கிறோம் என்று அந்நிறுவனம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த படம் தொடர்பாக ஹர்பஜன் சிங் தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில், “தமிழ் சினிமாவில் என்னை அறிமுகப்படுத்திய கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், டிக்கிலோனா, சோல்ஜர்ஸ் ஃபேக்டரி, சந்தானம் மற்றும் குழுவினருக்கு நன்றி. தலைவர், தல தளபதி உருவாகிய பூமி. தமிழ் வார்த்தைகளால் வார்த்திட்ட என்னை தூக்கி நிறுத்திய உறவுகளே. உங்களால் வெள்ளித்திரையில். இந்த வளர்ச்சிக்கு காரணம் சரவணன் பாண்டியன்” என்று குறிப்பிட்டுள்ளார்.


Advertisement