செம ஹேப்பியாக நடிகர் சிம்புவிற்கு நன்றி கூறிய நடிகை ஹன்சிகா மோத்வானி! ஏன் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்!

செம ஹேப்பியாக நடிகர் சிம்புவிற்கு நன்றி கூறிய நடிகை ஹன்சிகா மோத்வானி! ஏன் தெரியுமா? உற்சாகத்தில் ரசிகர்கள்!


hansika-motgwani-thank-simbu

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும்  நடிகை ஹன்சிகாவின் 50ஆவது திரைப்படம் மஹா. கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இத்திரைப்படத்தை யூ. ஆர். ஜமில் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

மஹா திரைப்படத்தில் தம்பி ராமையா,  கருணாகரன், ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் நடிகர் சிம்புவும் கௌரவ வேடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முழுவதும் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Hansika

 

அதில், 2020ஆம் ஆண்டு பல இன்னல்களை கடந்து சென்றுள்ளது. இந்த கொடிய தொற்றுக்கு ஆளாகி,பலர் உயிரிழந்து, தங்களின் குடும்பத்தை தவிக்கவிட்டு சென்றுள்ளனர். அவர்களின் குடும்பங்கள் மீண்டு நலம்பெற  பிரார்த்திக்கிறேன். மேலும் கொரோனா காலத்தில் கடுமையான உழைப்பை தந்து அமைதியான வழியில் மன உறுதியுடன் போராடிய பணியாளர்கள் அனைவரையும் வணங்குகிறேன்.

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்ததில் மொத்த படக்குழுவும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளது. வரும் கோடை காலத்தில் படத்தை வெளியிட ஆவலாக உள்ளோம். மேலும் இந்த படத்தில்  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட நடிகர் சிம்புவுக்கு நன்றி . அவர் வரும் காட்சிகளை கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என தெரிவித்துள்ளார்.