மிகப்பெரிய பட்ஜெட்டில் டாப் 2 ஸ்டார்களை வைத்து ஹிட் கொடுக்கவுள்ள கவுதம் வாசுதேவ் மேனன்.!gvm-is-going-to-team-up-with-junior-bachan-and-vjs-for

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்குனராக மட்டுமல்லாமல் தற்போது நடிகராகவும் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன்.

இதனிடையே அவரது இயக்கத்தில் உருவாகி வந்த 'துருவ நட்சத்திரம்' திரைப்படம் சூட்டிங் நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்து இருக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் இந்த  திரைப்படத்தின் ஷூட்டிங் வெகு விரைவிலேயே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல மதிப்பை பெற்றது.

Pan India

கௌதம் வாசுதேவ் மேனனின் இயக்கத்தில் உருவான 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி அடைந்தது. இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிலான மிகப்பெரிய வெற்றியை அடையவில்லை என்றாலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Pan India

இந்நிலையில், தற்போது கௌதம்மேனன், விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சன் ஆகியோரை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கயிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பான் இந்தியா சினிமாவாக இத்திரைப்படம் உருவாகயிருப்பதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சமீபகாலமாக விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சனின் திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை. இதனால் கௌதம் மேனன், விஜய் சேதுபதி மற்றும் அபிஷேக் பச்சனின் கூட்டணி மிகப் பெரிய ஒரு வெற்றி கூட்டணியாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.