
நடிகர் சூரி வீட்டு திருமண விசேஷத்தில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவாளிய
நடிகர் சூரி வீட்டு திருமண விசேஷத்தில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக மாறிவிட்டார் சூரி. காமெடியில் கலக்கிவந்த சூரி, அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கும் புது படம் ஒன்றில் ஹீரோவாகவும் நடித்துவருகிறார். மேலும் பல்வேறு புது படங்களிலும் ஒப்பந்தமாகி பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூரி.
இந்நிலையில் நடிகர் சூரியின் அண்ணன் மகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. சூரியின் குடும்பம் கூடும் குடும்பம் என்பதால், தனது அண்ணன் மகள் திருமணத்தை முன்னின்று நடத்திவைத்துள்ளார் சூரி. சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமணமண்டபம் ஒன்றில் திருமணம் நடைபெற்றுள்ளது.
மொத்த குடும்பமும் திருமண வேளையில் பிசியாக இந்தநிலையில், மணமகள் அறையில் வைத்திருந்த ஒன்பதரை பவுன் தங்க நகைகளை மர்மநபர் ஒருவர் திருடி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சூரியின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளநிலையில், நகைகளை திருடிச்சென்ற மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Advertisement
Advertisement