சினிமா

கௌதம் மேனன் இத்தனை கோடி சம்பளம் கேட்டாரா? அதிர்ந்து போன படக்குழு! எத்தனை கோடி தெரியுமா?

Summary:

Gautham Menon to direct Prashanth in Tamil remake of Andhadhun

மின்னலே, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா போன்ற தரமான படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் பிரபல இயக்குனர் கௌதம் மேனன். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம்  செம்ம ஹிட் ஆனது.

இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில், கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி நீண்ட நாட்கள் கிடப்பில் கிடந்த என்னை நோக்கி பாயும் தோட்டா படம் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் கௌதம் மேனன் அடுத்து பாலிவுட்டில் மெகா ஹிட் ஆகி தேசிய விருதெல்லாம் வாங்கிய Andhadhun படத்தை ரீமேக் செய்யவுள்ளார் என கூறப்பட்டது.

இந்த படத்தில் பிரபல தமிழ் நடிகர் ப்ரஷாந்த் நடிக்கவிருந்த நிலையில் இந்த படத்தை இயக்க கௌதம் மேனன் ரூ 10 கோடி சம்பளம் கேட்க, தயாரிப்புக்குழு கொஞ்சம் பின் வாங்க ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை கௌதம் எடுப்பது சந்தேகம் தான் என்கிறார்கள். ஆனால், இதுகுறித்து இதுவரை என ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவரவில்லை.


Advertisement