என்ன ஒரு அடக்கம்! தல அஜித் கௌதம் மேனனிடம் வேண்டிக்கொண்ட அன்பு கட்டளை! பூரிப்பில் தல ரசிகர்கள்.Gautham ajith ennai arinthal

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், அதிகபட்ச ரசிகர்கள் பட்டாளம், எளிமை, அடக்கம் இவை அனைத்து ஒருங்கே அமைய பெற்ற நடிகர் என்றால் தல அஜித் மட்டுமே. இவருக்கு என்று பட்டிதேட்டி எங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இவருக்கு ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

இவரின் படம் மற்றும் பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக திருவிழாக்களை போல கொண்டாடி வருகின்றனர். மேலும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் இவரின் ஸ்டைல் மற்றும் நடிப்பு அனைவரும் ரசிக்கும் படியாக அமைந்தது.

Gautham

இந்நிலையில் தற்போது இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் தான் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் நாளை வெளியாகவுள்ளது. எனவே படத்தின் ப்ரோமோஷனுக்காக கௌதம் மேனன் பேட்டி கொடுக்கையில் என்னை அறிந்தால் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

அதில் என்னை அறிந்தால் படம் பண்ணும் போது அஜித் சார் என்னை அடிக்கடி அழைத்து எனக்காக மாஸ் காட்சிகள் எதுவும் வைக்காதீர்கள். இது உங்கள் படம், எனக்காக எதையும் மாற்ற வேண்டாம் என அன்பு கட்டளை இட்டதாக இயக்குனர் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். இதனால் தல ரசிகர்கள் மிகுந்த பூரிப்பில் இருந்து வருகின்றனர்.