சர்க்கார்: செங்கோல் கதைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதா இல்லையா? சொன்னதை செய்தாரா முருகதாஸ்?

சர்க்கார்: செங்கோல் கதைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதா இல்லையா? சொன்னதை செய்தாரா முருகதாஸ்?



finally-murugadhas-thanks-to-varun-in-sarkar-title-card

AR முருகதாஸ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இன்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் சர்க்கார். படத்தின் கதை திருட்டுக்கதை என்ற விவகாரம் கழுத்தை நெறிக்க ஒருவழியாக சமரசம் பேசி முடித்தனர்.

உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் செங்கோல் என்ற எனது கதையை திருடி சர்க்கார் என்ற பெயரில் முருகதாஸ் படம் எடுப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த எழுத்தாளர் சங்க தலைவர் K பாக்யராஜ் இரண்டு கதையும் ஒன்றுபோல் உள்ளது, எனவே நீங்களே சமாதானமாக பேசிக்கொள்ளுங்கள் என்றார். ஆனால் அதனை முருகதாஸ் ஏற்க மறுத்துவிட்டார்.

Sarkar movie

பின்னர் விவகாரம் நீதிமன்றம் சென்றதை அடுத்து சர்க்கார் படக்குழு உதவி இயக்குனர் வருணுடன் சமாதானம் பேசி ஒருவழியாக இன்று படம் வெளியாகிவிட்டது. இந்நிலையில், தான் ஒப்புதல் அளித்தபடி சர்கார் படத்தின் டைட்டிலில் வருண் ராஜேந்திரனின் பெயரை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

அந்த டைட்டில் கார்டில், "தேர்தலில் ஒரு குடிமகனின் அடிப்படை உரிமையான வாக்கை கள்ள ஓட்டாக அடுத்தவன் போடுவது நாட்டு நலனுக்கு கேடு விளைவிக்கும் அபாயகரமான குற்றம். ஆனால் இது பொது நிகழ்வாக இன்றும் தொடர்கிறது. இந்த அநீதியை எதிர்த்து, தன் ஓட்டை இழந்த ஒரு ஹீரோ போராடி நீதியை நிலைநாட்டி, மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்கினால் எப்படி இருக்குமென எனக்கு கருவாக ஒரு கற்பனை உதித்தது. பின் மாதக்கணக்கில் விவாதித்து திரைக்கதை எழுதி ‘சர்கார்’ என்ற திரைப்படத்தை இயக்கி எடுத்தேன்.

Sarkar movie

இதே கற்பனைக் ‘கரு’ ஒரு உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரனுக்கும் உதித்தது. எனக்கு முன்பே எங்களது தென்னிந்திய திரைபட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதே கருவை அவரும் சிந்தித்து எனக்கு முன்பே பதிவு செய்திருந்தபடியால் வளர்ந்து வரும் உதவி இயக்குநர் வருண் என்கிற ராஜேந்திரனை பாராட்டி, அவர் உழைப்பையும் கௌரவிக்கும் வகையில், இதை பதிவு செய்து ஊக்குவிக்கிறேன்.

 திறமையுள்ள ஒரு சக உறுப்பினரை திரை உலகுக்கு அடையாளம் காட்டிய நமது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்திற்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.